மருதமலை அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ: கட்டுக்குள் கொண்டுவந்த வனத்துறையினர்!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 01:41 pm
forest-fire-at-maruthamalai

மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயை நீண்ட போராட்டத்திற்கு வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே, நேற்று மதியம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியது. தீ பரவியதை அறிந்த வனத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

இதைத் தொடர்ந்து, தடாகம் வனப்பகுதிக்கும் காட்டுத் தீ பரவியது. தொடர்ந்து, தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, இன்று அதிகாலை 1.40 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இரு மாபெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதேபோல, மருதமலை காட்டுத்தீயானது, கோவை வனப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் 4வது காட்டுத்தீ என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close