கரூரில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் இரு கட்சி நிர்வாகிகள் போராட்டம்!

  முத்துமாரி   | Last Modified : 14 Apr, 2019 06:12 pm
dmk-and-congress-protest-at-karur

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காத அதிகாரிகளை கண்டித்து, கரூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கரூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரது தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்று செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி மற்றும் இரு கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரச்சாரத்திற்கு திமுக கூட்டணிக்கு நேரம் மற்றும் இடம் ஒதுக்குவதில் பாகுபாடு காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close