அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 04:03 pm
sivaganga-district-it-raid-at-admk-executive-s-places

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அதிமுக பிரமுகர் நமச்சிவாயம் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட, மறுபக்கம்  ​​​​​​வருமான வரித்துறையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தின்போது, எதிர்க்கட்சியினர் வீட்டில் மட்டும் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

இந்நிலையில், இன்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுகவின் ஆதரவாளர் கண்ணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் நமச்சிவாயம் என்பவரது வீட்டில்,வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது அதிமுகவினர் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close