சின்னம் தெளிவாக இல்லை: உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 12:20 pm
naam-tamilar-katchi-files-case-in-sc

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழம் (ஏப்.18) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் சீமான், அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர மாதிரியில், நாம் தமிழர் கட்சியின் சின்னமான 'விவசாயி' சின்னம் தெளிவாக இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. எனினும், இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close