மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி நீதிமன்றத்தில் மனு!

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 12:49 pm
nalini-s-petition-for-parole

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 

இந்த மனுவின் மீதான இன்றைய விசாரணையில், நளினிக்கு பரோல் வழங்குவது குறித்து, வருகிற ஜூன் 11க்குள் தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும், ஜூன் 11ம் தேதிக்கு முன்னதாகவே, பரோல் வேண்டும் என்றால் விடுமுறை காலத்தில் செயல்படும் நீதிமன்றத்தை அணுகி பரோல் பெறவும் நளினிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close