தமிழகத்தில் வாக்குப்பதிவு எப்போது? விதிமுறைகள் என்னென்ன?- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 15 Apr, 2019 01:50 pm
ec-rules-for-tn-election

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, வாக்குப்பதிவு நேரம், விதிமுறைகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக, அதாவது காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "தொகுதிக்கு சம்பந்தப்பட்டவர்கள் நாளை மாலை 6 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும். நாளை மாலை 6 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் 18ம் தேதி வரை, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் எதுவும் நடத்தக் கூடாது. அதேபோன்று நாளை மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்சாரம் செய்யக் கூடாது" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த 4 தொகுதிகளிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, இந்த 4 தொகுதிகளிலும், நாளை மாலை 6 மணி முதல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close