அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 03:40 pm
for-the-next-2-days-there-will-be-dry-weather

நாளை மறுநாள் முதல் இரண்டு தினங்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும்,  நாளை மறு நாள் முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பநிலையை பொருத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும், வெப்ப நிலை அதிகப்பட்சம் 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம்  27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close