ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கருதாம்பாடி குட்டையில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவன் நந்தகுமார் மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவன் கதிரேசன் ஆகியோர் உயிரிழந்தனர். தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை கழிக்க மாணவர்கள் கடல், ஆறு, குட்டையில் குளிப்பதால் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
newstm.in