ஒரே தட்டில் சாப்பிடும் தோனி - ஜாதவ்! ப்ரோமான்ஸ் வீடியோ

  முத்துமாரி   | Last Modified : 15 Apr, 2019 05:11 pm
kedar-jadhav-feeds-ms-dhoni-from-his-plate-after-csk-win-7th-match

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியும், கேதர் ஜாதவும் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஐபிஎல் போட்டித் தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. போட்டிகள் ஒருபக்கம் நடைபெற, மைதானத்தை தாண்டி சில நிகழ்வுகள் எப்போதும் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தும். அதிலும், தல தோனியின் செயல்பாடுகளை கவனிக்கவே ஒரு கூட்டம் இருக்கும்.  அவர் மைதானத்தில், மகள் ஸிவாவுடன் விளையாடும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. 

அதேபோன்று தற்போது தோனியும், கேதர் ஜாதவும் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோவை கேதர் ஜாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ப்ரோமான்ஸ்' என்று பதிவிட்டுள்ளார். ஜாதவ், தனது தட்டில் இருக்கும் உணவை தோனிக்கு ஊட்டிவிடுகிறார். பின்னர் தானும் உண்கிறார். இருவரும், ஏற்கனவே நண்பர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரிந்தாலும், இந்த வீடியோவில் தோனியும், ஜாதவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவே தோன்றுகின்றனர். இந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bromance ❤️

A post shared by Kedar Jadhav (@kedarjadhavofficial) on

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close