சென்னையில் இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு!

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 09:18 am
chandrababu-naidu-meets-mk-stalin

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்திக்கும் பொருட்டு, சென்னை வருகிறார். இன்று பிற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அவர் இன்று சென்னைக்கு வரமுடியாத பட்சத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் சந்திர பாபு நாயுடு. 

கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்தில் சென்று புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாகவோ அல்லது மக்களவைத் தேர்தலுக்கு பின் கூட்டணி குறித்தோ ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தேர்தல் சமயம் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close