முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவில் இருந்து நீக்கம்! என்ன காரணம்?

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 09:18 am
mullai-venthan-removed-from-dmk

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், பா.ம.கவின் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து, முல்லை வேந்தன் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

முல்லைவேந்தன் கடந்த 2014ம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், தேமுதிகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக பக்கம் திரும்பினார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close