அரசியல் தலைவர்கள் பேட்டியில் தேர்தல் குறித்து பேசக்கூடாது! - தேர்தல் ஆணையம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 10:45 am
ec-rules-for-election-2019

தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது, தேர்தல் குறித்து பேசக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, தேர்தல் விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. 

அதன்படி,  இன்று மாலை 6 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. நாளை மாலை 6 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் 18ம் தேதி வரை, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் எதுவும் நடத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது தேர்தல் குறித்து பேசக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close