ராஜ்நாத் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 02:00 pm
home-minister-rajnathsingh-files-his-nomination-from-lucknow

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் லக்னோ தொகுதியில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். இன்று அவர், லக்னோவில் சாலையோர பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

லக்னோ மக்களவைத் தொகுதியில் இதுவரை ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை கூட லக்னோ நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிக்கவில்லை. 

இதனால், லக்னோ தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்நாத் சிங், கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியிலும்,  அதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு லக்னோவிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற கடந்த 7 தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டவர்களே வெற்றி பெற்றுள்ளனர். அதாவது அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த அடல் பிஹாரி வாஜ்பாய் 5 முறையும், மற்றொரு மூத்த தலைவரான லால்ஜி டாண்டன் ஓர் முறையும், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜ்நாத் சிங்கும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close