வேலூர் தேர்தல் ரத்து குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை: வருமானவரித்துறை

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 02:08 pm
vellore-election-update

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு, நாங்கள் எவ்வித பரிந்துரைகளையும் மேற்கொள்ளவில்லை என்று வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  அதுமட்டுமின்றி கவர்வாரியாக  வாக்குச் சாவடி எண்கள் எழுதப்பட்டு அதனுள் பணம் வைக்கப்பட்டிருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது

இதனால், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், வருமானவரித்துறை இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. மேலும், "தேர்தல் குறித்து எந்த பரிந்துரையும் வருமானவரித்துறை ஒருபோதும் செய்யாது. வேலூரில் சோதனை நடத்தியது குறித்து இதுவரை 5 முறை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளோம். எனவே, தேர்தல் ஆணையம் மட்டுமே இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளது. 

வேலூர் தொகுதி தேர்தல் குறித்து, முன்னுக்குபின் முரணான கருத்துக்கள் வருவதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close