ஏப்.18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும்

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 03:23 pm
one-day-leave-should-be-paid-on-april-18

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர்  நல ஆணையர்  நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பொதுமக்கள் ஏதுவாக வாக்களிக்க தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கவேண்டுமென, தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலாளர்  நல ஆணையர்  நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை தர தவறும்  நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close