ஏப்ரல் 19 - இல் வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்!

  முத்து   | Last Modified : 16 Apr, 2019 05:57 pm
12th-class-public-test-results-release-on-april-19th

12 - ஆம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள், ஏப்ரல் 19 -ஆம் தேதி காலை 9.30  மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாணவர்கள் அளித்துள்ள மொபைல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள்  எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது வழங்கிய மொபைல் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

மேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 -ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close