அமமுக ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பறிமுதல் !

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 07:47 am
rs-1-50-crores-seized-by-income-tax-officers-at-ammk-andipatti

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாகவும், ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆண்டிப்பட்டியில் இயங்கி வந்த அமமுக கட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில், அங்கு போலீசார் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.  பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.   

நேற்று இரவு 8 மணி முதல் சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாகவும், வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close