நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் தேதி மாற்றம்! அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 09:19 am
neet-exam-date-wrongly-entered-in-hall-ticket

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் தேர்வு தேதி மாறி இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தேசிய தேர்வு முகமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. 

நடப்பு ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு(நீட்) வருகிற மே 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து பார்த்தால், பலருக்கு தேதி மாறியிருந்தது. சிலருக்கு ஏப்ரல் மாத தேதிகள் இடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், கல்வியாளர்கள் மூலமாக தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது.

நீட்  தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/  https://nta.ac.in/ ஆகிய இணையதளங்களில் பெறலாம். நீட் தேர்வுக்கு இந்தியா முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close