உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..?

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 11:29 am
how-to-know-your-polling-booth

நாளை (18ஆம் தேதி) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதே சமயம், வாக்காளர் பட்டியலிலும் நம் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளலாம். எப்படி?

முதலில் தேசிய வாக்காளர் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும். https://www.nvsp.in என உங்கள் பிரவுசரில் பதிவு செய்யுங்கள்.  அந்த இணையதளத்தின் இடது பக்கம, 'Search Your Name in Electoral Roll' என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் இரண்டு வழிகளில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கும் பிரத்யேக EPIC (வாக்காளர் அடையாள அட்டை எண்) நம்பரை நேரடியாக பதிவு செய்து, உங்கள் பெயர் உள்ளதா என சோதித்துக் கொள்ளலாம்.

அல்லது வாக்காளரின் பெயர், தந்தையின் பெயர், வயது பிறந்த வருடம், ஊர், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சோதித்து கொள்ளலாம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close