நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 02:03 pm
rain-at-nellai-ramanathapuram-district

நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

ஏப்ரல்- மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்தாண்டும் வழக்கத்திற்கு மாறாகவே, சூரியன் சுட்டெரித்து வருகிறது. பாரபட்சமில்லாமல் தமிழகத்தில் பெரும்பாலாக அனைத்து பகுதிகளிலும் வெயில் அதிகமாக இருக்கிறது. 

இந்நிலையில், நேற்று முதல் ஒரு சில பகுதிகளில் தட்பவெப்பநிலை மாறியுள்ளது. இன்று நெல்லை மாவட்டத்தில், நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close