தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை! - வானிலை ஆய்வு மையம் தகவல்

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 02:03 pm
cmc-report-about-rain

தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, "தெற்கு உள்கர்நாடகா முதல் தெற்கு தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தென் தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சுமார் 40 முதல் 50 கிமீ அளவில் காற்று வீசக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 

இன்று நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close