நாளை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 03:40 pm
movie-show-cancelled-tomorrow-due-to-election

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து, 100% வாக்குப்பதிவை கருத்தில்கொண்டு, திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close