வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? தேர்தல் அதிகாரி விளக்கம்

  அனிதா   | Last Modified : 17 Apr, 2019 04:35 pm
how-to-use-the-voting-machine

மக்களவை தேர்தலையொட்டி வாக்குபதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செயல்விளக்கம் அளித்தார். 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நாளை நடைபெறும் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்முறை விளக்கம் அளித்தார்.

வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மேலே உள்ள சிறிய பல்பில் பச்சை கலர் ஒளி இருப்பதை கவனித்துவிட்டு, பச்சை கலர் ஒளி இருந்தால் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேராக உள்ள நீல கலர் பட்டனை அழுத்த வேண்டும். உடனே அருகில் உள்ள பல்பில் சிவப்பு கலர் ஒளி வருவதுடன், அருகில் உள்ள ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் உள்ள கண்ணாடியில் நீங்கள் அளித்த வேட்பாளர் பெயர் 7 வினாடிகள் தெரியும். அதோடு ஒரு ஒலி எழும்பும். அவ்வாறு ஒலி எழுப்பப்பட்டால் உங்கள் வாக்கு ஏற்றுக்கொள்ளபட்டது என தெரிவித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close