ஓட்டு போடுங்க.. 10% தள்ளுபடி பெறுங்க..!

  அனிதா   | Last Modified : 17 Apr, 2019 05:18 pm
to-vote-get-10-discount

மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்கள் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 17வது மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வாக்காளர்களை உற்சாகப்படுத்தவும், வாக்களிக்கும் அனைவருக்கும்  உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கம் அறிவித்திருந்தது. 

அதன்படி, தமிழகத்தில் உள்ள சரவண பவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் உணவு விடுதிகளில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1200 உணவு விடுதிகளில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. 

இந்த சலுகை மாலை 6 மணிக்கு மேல் என்றும், வாக்காளர்கள் தங்கள் விரல்களில் உள்ள மை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து இந்த தள்ளுபடியை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், திருச்சியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாக்காளர்களுக்கு இலவச துணிப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கோவையில் உள்ள பிரபல ப்ரோஜோன் மாலில் வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் இலவசம் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close