புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் சோதனை!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 04:33 pm
election-squad-raid-at-rangasamy-house-in-puducherry

புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை(ஏப்.18) நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதற்கிடையே, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி வீட்டில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று சோதனை நடைபெறுவதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close