லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்! தேர்தல் பணிகள் பாதிக்குமா?

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 04:46 pm
lorry-strike-in-tn

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு கலைக் கல்லூரியில், தேர்தல் பணியில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள் இன்று திடீரென போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை(ஏப்.18) நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த சூழ்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு கலைக் கல்லூரியில் நிற்கும் 22 லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் சற்றுமுன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 3 நாட்களாக தேர்தல் அதிகாரிகள் உணவுக்கு கூட பணம் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர்கள், நாளை தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்திற்கு உடனடி தீர்வு காணாவிட்டால், அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செல்ல வேண்டிய வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. 

இன்று மாலை 6 மணிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close