தமிழகத்தில் மேலும் சில தொகுதிகளில் தேர்தல் ரத்து?

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 07:18 pm
what-are-the-constituencies-in-which-the-poll-can-not-be-held-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ள தொகுதிகள் எவை? என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடகச் செய்திகள், ஆணையத்துக்கு வந்த புகார்கள், சமூக ஊடக செய்திகள் அடிப்படையில் அறிக்கை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த இரு நாட்களாக ஏராளமான இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படுவதாலும், தேர்தல் ஆணையம் இந்த அறிக்கை கேட்டுள்ளதாம்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில்,  ஆணையம் மீண்டும் அறிக்கை கேட்டுள்ளதால்,  மேலும் சில தொகுதிகளில் தேர்தல் ரத்தாகுமா? என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close