திமுக அலை தமிழகத்தில் ஒருபோதும் வீசாது: அமைச்சர் ஜெயகுமார்

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 11:29 am
voted-has-minister-jayakumar

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ராஜலட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஆதரவாகவும், திமுகவிற்கு எதிராகவும் தற்போதைய மக்கள் நிலைபாடு உள்ளதென்றும். மக்கள் ஆதரவோடு அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், திமுக வினர் தாங்கள் 2 ஜி ஊழலில் அடித்த பணத்தை வைத்து சேரி பகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மக்கள் அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள், ஓட்டுக்கு 200 பணம் கொடுத்து திமுகவும் அமமுகவும் மக்களை அவமதித்து வருகிறது என கூறினார். 

மேலும், திமுக அலை தமிழகத்தில் ஒருபோதும் வீசாது,  மக்கள் அனைவரும் தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை தவறாமல் பதிவு செய்து 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close