கலிங்கப்பட்டியில் வைகோ வாக்களித்தார்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 12:50 pm
vaiko-voted-in-kalingapatti

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்தனர். 

அதன்படி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். வைகோ, தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். உடன் வைகோவின் சகோதரர் வை.ரவிச்சந்திரன், மகன் துரை வையாபுரி ஆகியோரும் வந்து வாக்களித்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close