ஊட்டிக்கு பேருந்துகள் இல்லை; வாக்களிக்க முடியாமல் மக்கள் அவதி!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 02:50 pm
ooty-buses-are-not-in-active-people-are-in-trouble

உதகைக்கு முறையாக பேருந்துகள் சரிவர இயங்காததால், வெளியூரில் இருந்து வரும் மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

கோவையில் இருந்து உதகைக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை முதல் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இது குறித்து பயணிகள் கூறுகையில், “ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. மேலும், தங்களது வாக்குகளை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் இருந்து உதகை செல்ல மூன்றரை மணிநேரம் ஆகும். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பேருந்து கிடைக்குமா..? என கேள்வி குறியாக உள்ளது. அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணமாக, குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். உதகைக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அணுகினால் அதிகமான தொகை கேட்கின்றனர், என வேதனையுடன் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close