மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 02:59 pm
madurai-murder

மதுரை சென்ஜோசப் பள்ளி அருகில் முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் குருசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும் பல நாட்களாக முன்பகை காரணமாக மோதல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், இன்று மதுரை சென் ஜோசப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் மூத்த மருமகன் எம்.எஸ். பாண்டியன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

ராஜபாண்டி ஆட்கள்தான் முன்பகை காரணமாக இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close