நாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 09:21 pm
the-results-of-the-12th-are-scheduled-tomorrow

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை சரியாக 9.30 மணிக்கு  வெளியிடப்படும். மாணவ, மாணவிகள் எஸ்எம்எஸ் மற்றும் ஆன்லைன் மூலமாக தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார் அமைச்சர்.

மேலும், "தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெற உள்ள உடனடி தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற்று, இதே ஆண்டில் கல்லூரிக்குச் செல்லலாம்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாணவர்கள் அளித்துள்ள மொபைல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள்  எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது வழங்கிய மொபைல் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

மேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 -ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த 16-ஆம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close