பிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 10:51 am
plus-2-results

தமிழகத்தில் இந்தாண்டு சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

2018-19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில், 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%. வழக்கம் போல் தேர்ச்சியில், மாணவர்களை விட மாணவிகளே அதிகம். 

தமிழகத்தில் சிறைகளில் தண்டனை பெற்று வரும் 45 சிறைக்கைதிகள் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 34 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் 2,692 பேர் தேர்வு எழுதினர் அதில் 2,404 பேர் தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close