பிளஸ் 2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 11:47 am
plus-2-results-tirunelveli-update

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் 2018-19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%. வழக்கம் போல் தேர்ச்சியில், மாணவர்களை விட மாணவிகளே அதிகம். 

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 317 பள்ளிகளில் 38 ஆயிரத்து 662 மாணவ மாணவிகள் மேல்நிலைத் தேர்வு எழுதினர், இதில், 36 ஆயிரத்து 501 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இந்த தேர்ச்சி சதவீதம் 94.41 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.15% ஆகும். கடந்த ஆண்டை விட திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close