பாமக, பாஜக கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை இருக்காது: திருமாவளவன் காட்டம்!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 11:55 am
thirumavalavan-press-meet

பாமக போன்ற சாதியக் கட்சிகள், பாஜக போன்ற மதவெறி கட்சிகள் இருந்தால்  சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஏற்படாது என்று அரியலூரில் நடைபெற்ற வன்முறைக்கு பின்னர் திருமாவளவன் தெரிவித்தார். 

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "தமிழகத்தில் நடைபெற்ற  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இதனால், தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பாமக வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வேண்டும். சாதிய வன்முறைகளை தூண்டிவிட்டு அறிக்கையை வெளியிட்டனர். இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற, வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர்.

இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போல், தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அதிமுக மற்றும் பாஜக இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது.

அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணி முன்னணியில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும், இரண்டாயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால், கள்ள ஓட்டு போட்டது வாக்குச்சாவடி கைப்பற்றியது காரணமாக இருக்கலாம். 

இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று மனு அளிக்க இருக்கிறேன். சிதம்பரம் தொகுதியில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றினர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம். இவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பாமக போன்ற சாதியக் கட்சிகள், பாஜக போன்ற மதவெறி கட்சிகள் இருந்தால்  சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஏற்படாது" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close