சென்னை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 01:02 pm
gunmen-police-protection-for-chennai-vote-counting-centres

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்குப் பெட்டிகள், காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 1 துணை ஆணையர் தலைமையில், 1 உதவி ஆணையர், 4 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு பணியானது வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று, வடசென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரியிலும், தென்சென்னை வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைகழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close