அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது : முதல்வர் பழனிசாமி!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 12:28 pm
cm-edappadi-palanisamy-press-meet

தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று (ஏப்.18) நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி வாக்களிக்கும் பொருட்டு சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார். 

இன்று சென்னை திரும்பிய அவர், சேலம் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நடைபெறவுள்ள நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.  

நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஆட்சி தொடரவே மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இப்போது அமைத்துள்ள கூட்டணியே வருகிற தேர்தலிலும் தொடர வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close