பிளஸ் 2 பொதுத்தேர்வு : ஏப்ரல் 22 முதல் விடைத்தாள் நகல்களை பெறலாம்

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 01:11 pm
announcement-date-for-receiving-the-copies-of-the-plus-2-general-examination-answer-sheets

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) மதிப்பெண் அனுப்பப்படுகிறது.

நாளை காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். மேலும், வருகிற 24 -ந்தேதி காலை 9 மணி முதல் 26 -ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெற மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும், வருகிற 22 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஜூன் 2019 பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுகள் ஜூன் 6 -ஆம் தேதி தொடங்கி 13 -ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வுகள் ஜூன் 14 -ஆம் தேதி தொடங்கி 21 -ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close