கோவை - மும்பை இடையே மேலும் ஒரு விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 08:25 pm
coimbatore-mumbai-is-also-an-airline-service-spicejet

கோவை - மும்பை இடையே மேலும் ஒரு விமான சேவையை, வரும் மே 2-ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

 ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம், விமானப் பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. 

குறிப்பாக, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களுடன் இணைக்கும் வகையில் நாள்தோறும், 24 விமான சேவைகளை அறிவித்துள்ளது. அதில், கோவை - மும்பை இடையே மேலும் ஒரு விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. 

கோவையில் இருந்து ஐதராபாத், மும்பை, பெங்களூரூ, புனே மற்றும் டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் புதிய 7 விமான சேவைகளை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, கோவை - மும்பை இடையே வரும் மே 2-ம் தேதி முதல் புதிய விமான சேவையை வழங்குகிறது. 

மும்பையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் எஸ்.ஜி. 6361 என்ற எண் கொண்ட விமானம், காலை 11.10 மணிக்கு கோவையை வந்தடைகிறது. பின்னர், எஸ்.ஜி. 6362 என்ற எண் கொண்ட விமானம், கோவையில் இருந்து நண்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.55 மணியளவில் மும்பைக்கு சென்றடைகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close