வள்ளுவர் கோட்டம் அருகே தீவிபத்து; உயிர்ச் சேதம் தவிர்ப்பு

  டேவிட்   | Last Modified : 20 Apr, 2019 07:23 am
fire-accident-in-chennai-valluvar-kottam

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு திடீரென தீ விபத்து நேரிட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மைகள், சிலைகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து நேரிட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரச்சேதம் எதுவும் இல்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close