4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்!

  முத்துமாரி   | Last Modified : 20 Apr, 2019 12:35 pm
stalin-campaign-for-4-assembly-constituency-election

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறுவதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 1 முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துளளது. மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று இந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான பிரச்சாரத்தை ஒரு சில கட்சி வேட்பாளர்கள் நேற்று ஆரம்பித்துள்ளனர். அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று பிரச்சாரத்தை தடங்கினார், 

இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த 4 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வருகிற மே 1ம் தேதி அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மே 1, 2 ஆகிய தேதிகளில் ஓட்டப்பிடாரம், மே 3, 4 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம், மே 5, 6 ஆகிய தேதிகளில் சூலூர், மே 7, 8 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close