வன்முறை சம்பவம் குறித்து புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை: தொல்.திருமா குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 02:17 pm
thol-thirumavalavan-press-meet

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்ட, பலரது பெயர்களை குறிப்பிட்டு நாங்கள் புகார் அளித்தும், அவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். வன்முறை சம்பவம் நடைபெற்ற பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்தும், வரவிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தியதாக தொல்.திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொன்பரப்பியில் நேற்று முன்தினம் பானை சின்னத்துக்கு வாக்களிக்கச் சென்ற பெண்களை தடுத்து அவர்களிடம், பாமக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தகராறு செய்துள்ளனர். 

வன்முறையில் ஈடுபட்ட பலரது பெயர்களை குறிப்பிட்டு நாங்கள் காவல்துறையில் புகார் அளித்தும், அவர்களை காவல்துறை கைது செய்யவில்லை. எனவே, இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் நேரடியாக சென்று புகார் அளிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

 

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close