பொன்னமராவதியில் போராட்டம் நடத்திய 1,000 பேர் மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 05:31 pm
case-filed-against-protesters

பொன்னமராவதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போராட்டம் நடத்திய 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினர் கேவலமாகச் சித்தரித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசிடம் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட சமூக மக்கள், பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல் நிலையத்தை நோக்கி கற்களை வீசினர். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தடியடி நடத்தினர். இதையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து போராட்டத்தை கட்டுப்படுத்தினர். 

இதைத்தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவானது ஏப்ரல் 19ம் தேதி முற்பகல் 12மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி முற்பகல் 12மணி வரையிலும் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போராட்டம் நடத்திய 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close