நாளையும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 09:59 pm
closing-the-shops-tomorrow-in-pudukottai-dist

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளையும் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொன்னமராவதி சம்பவம் தொடர்பாக அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், நாளையும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, பொன்னமராவதி சம்பவம் தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டுமென அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close