திருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 11:47 am
trichy-accident

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி, படிகாசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஒருபக்கமாக மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதில், 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close