ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு! அட்டவணை வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 12:00 pm
engineering-counselling-date-announced

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2018-19 கல்வியாண்டிற்கான பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (ஏப்.19) வெளியான நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். 

அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான அறிவிக்கை நாளை வெளியாகும். மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். ஜூன் 16ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும், ஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கலந்தாய்வு நடத்தி வரும் நிலையில், இந்தாண்டு முதல் முறையாக  தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close