கள்ள ஓட்டு புகார் எதிரொலி: 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 01:58 pm
re-election-in-tn

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின்போது, கள்ள ஓட்டுகள் விழுந்ததாக கூறப்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் விழுந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதன்படியே, தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அறிக்கை அனுப்பி வைத்திருந்தார்.

அதில் அவர், "தர்மபுரி மாவட்டம் பொன்பரப்பியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூரில் ஒரு வாக்குச்சாவடி என 10 வாக்குசாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்" என்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும், இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close