மதுரை : பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் பணி நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 01:55 pm
madurai-tahsildar-suspended

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மதுரையில் வாக்குப்பதிவு முடிந்ததும், சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நுழைந்து அங்குள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்றதாக புகார் எழுந்தது. இந்த தகவல் அறிந்த அரசியல் கட்சியினர் அப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினர்.  

தொடர்ந்து விசாரணையில், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பது தெரிய வந்துள்ளது.  நள்ளிரவே அவரிடம் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக,  பெண் வட்டாச்சியர் சம்பூர்ணம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். முழு விசாரணைக்கு பிறகு, இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close