திருச்சி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 21 Apr, 2019 08:49 pm
tirchy-prime-minister-modi-s-financial-support-for-the-dead

திருச்சி அருகேயுள்ள முத்தையம்பாளையத்தில் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதல்வர் பழனிசாமி முத்தையம்பாளையத்தில் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close