காஞ்சிபுரத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளைகேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in